Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தையிட்டிக்கிராம விவசாயிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளிற்காக உதவி

விவசாயப்பூமியாகக்காட்சியளித்த தையிட்டிக்கிராமம் அதிஉயர் பாதுகாப்புவலயமாக 30 வருடங்கள் இருந்ததால், பெரிய அளவிலான வருவாயை எமது விவசாயிகள் இழந்திருந்தனர், மீண்டும் தையிட்டிக்கிராமத்தின் மண்வளத்தைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டில் சிறிய உதவிகள் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது, அதில் சிலர் முயற்சிகளைத் தொடராதபோதும் ஒருசிலர் வெற்றிகரமாக பயிர்ச்செய்கையை மேற்கொண்டு சிறந்த வருவாயைப்பெற்றுள்ளனர், அவர்களின் விவசாயநடவடிக்கைகளை மேற்பார்வை செய்த புதிய வாழ்வு நிறுவனத்தின் திட்ட இணப்பாளர் திரு. விஜயலாதன், மற்றும் உபசெயலாளர் திரு. செ. கருணாகரன் ஆகியோரின் வேண்டுகோளிற்கு இணங்க விவசாயிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளிற்காக தலா 50,000/- .வீதம் , திரு. S. ஜெயதரன், திரு. S. சுகிதரன், திரு. S. செந்தூரன் ஆகியோரிற்கு வழங்கப்பட்டது. இந்தத்தொகையானது, விதைகளிற்கும், பசளைகளிற்குமானது, திறம்பட வெற்றிகரமாகச் செய்து நிருபிக்கும் விவசாயிகள் மீண்டும் ஊக்குவிக்கப்படுவர், இத்திட்டத்திற்கு நிதிப்பங்களிப்புச்செய்த தையிட்டியைச் சேர்ந்த திரு சி. சாந்தகுமார் அவரின் நண்பர்களான, ரமேஸ், ராசேந்திரம், சாந்தரூபன் ஆகியோரிற்கு இதயபூர்வ நன்றிகளைத்தெரிவித்து நிற்கின்றோம்🙏

Comments are closed.