திரு.செலவரட்ணம் பார்த்தீபன் அவர்களின் அயராத உழைப்பிற்கு வெற்றி!!
30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து, பின்னர் விடுவிக்கப்பட்ட விவசாய பூமியான தையிட்டி கிராமத்தில், விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த வருடம் குழாய்க்கிணறு அமைத்துக்கொடுத்ததோடு, விவசாய ஊக்குவிப்புத்தொகையும் ஆர்வமுள்ள விவசாயியான விக்னேஸ்வரா வீதியைச்சேர்ந்த திரு.செலவரட்ணம் பார்த்தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவரின் அயராத உழைப்பிற்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதனை மேற்பார்வையாளரான திரு. துவாரகன் எமக்கு அறியத்தந்துள்ளார். இதற்கான நிதியை தையிட்டி வாழ் மக்கள், கிராம அபிவிருத்தியை கருத்தில் கொண்டு தந்திருந்தனர்.
நிதிஉதவி செய்த உறவுகளிற்கும், நிதியை வீண்விரயம் செய்யாது திறம்பட செயற்பட்டமைக்காக திரு. செ. பார்த்தீபனுக்கும் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
