எமது நிறுவனத்தின் வழிகாட்டலால் சாதித்துக் காட்டிய திரு. க.தசாகரன் ( சுடர்)
மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் , ஒரு குடும்பம் ஒரு இலட்சம் என்ற திட்டத்தின்கீழ், நிதியைப்பெற்றுக்கொண்ட திரு. க.தசாகரன் ( சுடர்) அவர்களின் விவசாய முயற்சியானது , பெரும் வெற்றியைத்தந்துள்ளதாகவும் எமது நிறுவனத்திற்கும் , நிதிப்பங்களிப்புச்செய்த பிறேம் அண்ணா அவர்களுக்கும் தனது இதயபூர்வ நன்றிகளைத்தெருவித்துக்கொண்டார்,
எமது நிதியைப்பெற்று ஆரம்பத்தில் 20 இந்தியா நாட்டு முருங்கை மரங்களை நட்டதாகவும் ஒரு போகத்திற்கு, இலைகளையும், காய்களையும் விற்பனைசெய்ததால் ஒரு மரம் அண்ணளவாக 40,000- வில் இருந்து 50,000 ரூபாவரை வருமானத்தைத்தந்ததாகவும், அந்த வருமானத்தில் வேறுகாணியைத்திருத்தி இப்போது 150 முருங்கை மரங்களையும், 100 பப்பாசி மரங்களையும் நட்டு வளர்த்துவருவதாகவும் குறிப்பிட்டார்,
இரண்டுவருடத்தில் தான் பெருவளர்ச்சி அடைந்ததாகவும், எமது நிறுவனத்தின் வழிகாட்டலால் தன்னால் சாதிக்கமுடிந்ததாகவும் கூறினார், நன்றி தலைவர் பார்த்தீபன் உங்களது மேற்பார்வை, கண்காணிப்பு, தரவுகளிற்கு





Previous Post
Next Post
