Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

குடும்பச்செலவுகளுக்கு கையேந்தும் நிலமை இப்போது இல்லை!!

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்மூலம் நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி்யான முயற்சியாளர் திரு. நவரத்தினம் அவர்களின் திட்டத்தை பார்வையிடச்சென்ற எமது மாணவப்பிரதிநிதியான பிரதீபனின் பதிவில் இருந்து, மாதம் 15000- 20,000 ரூபாவரை வெற்றிலை விற்பதால் இலாபம் வருவதாகவும், அதைவிட வெற்றிலை மரங்கள் பதிவைத்து ஒரு மரம் 100/- ரூபாவீதம் விற்று இலாபத்தைப்பெற்றுக்கொள்ளவதோடு, வீட்டுத்தோட்டம் மற்றும் கோழிவளர்ப்பு போன்றவற்றால் வருமானம் வருவதால், தனது குடும்பச்செலவுகளுக்கு கையேந்தும் நிலமை இப்போது இல்லை என்றும், புதிய வாழ்வு நிறுவனத்தின் திட்டமிடல், வழிநடத்தலுக்கும் பிறேம் ஐயாவின் நிதிப்பங்களிப்பிற்கும், தனது மனப்பூர்வ நன்றிகளைத்தெரிவுக்கும் படியும் மனம் நெகிழ கூறியதாக எமது மாணவப்பிரதிநிதி பிரதீபன் கூறியிருந்தார்,

நன்றி பிரதீபன் தொடர்ந்த உங்களின் கண்காணிப்பிற்கும் தரவுகள் திரட்டியமைக்கும்🙏, மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தைக்கொண்டுவர பாடுபடும் எமது நிறுவனத்திற்கு, கைகொடுக்கும் மதிப்பிற்குரிய திரு. சிவசாமி பிறேம் அவர்களிற்கு நன்றிகள் கோடி🙏

Comments are closed.