Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

IMHO USA உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை பெரு வெற்றி!!

நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளைக்கருத்தில் கொண்டு, எமது வளங்களைப்பயன்படுத்தி எவ்வாறு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது, என்பதுடன் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாக உலக சுகாதார மருத்துவர் சங்கம் அமெரிக்காவுடன்( IMHO USA) கலந்துரையாடப்பட்டதன் விளைவாக, உலக சுகாதார மருத்துவர் சங்கத்தின் தலைவர் மதிப்பிற்கும் , அன்பிற்குமுரிய வைத்தியகலாநிதி. T. ராஜம் அம்மாவின் ஏற்பாட்டிலும் , எமது நிறுவனத்தின் தலைவர் திரு. பா. பார்த்தீபனின் தலைமையிலும் மன்னார் மாவட்டம், பரப்பங்கண்டல் எனும் கிராமத்தில் முதல் தடவையாக , மூன்று ஏக்கர் காணியில் நெல் விதைத்து, பெரும் வெற்றியாக 120 மூட்டைகளைப் பெற்றுக்கொண்டோம்.

எம்மோடு பயணித்த சுதர்சன் குடும்பம், மாணவப்பிரதிநிதிகள், தம்பி குகன், மற்றும் கிராம்மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவிப்தோடு, எமது இந்தத்திட்டத்திற்கான வயல்காணியைத் தந்துதவிய IMHO USA இன் பொருளாளர் திரு. முரளி அவர்களுக்கும் , எமது திட்டத்திற்கு நிதி உதவிவழங்கி எமது திட்டங்களிற்கு பக்கபலமாக இருக்கும் IMHO USA இற்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்🙏.

Comments are closed.