தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும்
எம்மோடு பயணிக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கான வலுவூட்டல் நிகழ்வும், ஓவியம் சார் கண்காட்சியும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வினை சோமஸ் கந்தா கல்லூரி அதிபரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் பொருளாளருமான மதிப்பிற்குரிய திரு. சி. திரிகரன் தலைமையில் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.
குறித்த நிகழ்வில் ஜெர்மன் தூதரகம் ஊடாக வருகைதந்திருந்த TARA நிறுவனத்தினர், சுயதொழில் முயற்சியாளர்களுடனும், கலைஞர்களுடனும் கலந்துரையாடியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து எமது உள்ளூர்உற்பத்தியாளர்களின் பொருட்கள், கலைஞர்களின் கலைப்பொருட்களைப்பார்வையிட்டதோடு, பொருட்களின் தரம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பாகவும், ஜெர்மன் நாட்டுமக்களின் தேவைகள் எப்படியானவை, எவ்வாறான பொருட்களை தாம் கொள்வனவு செய்ய விரும்புகின்றோம் என்பது தொடர்பாகவும், பெருமளவு பொருட்களை களஞ்சியப்படுத்தக்கூடிய இடவசதிகள் தொடர்பாகவும், சந்தைப்படுத்தலுக்கான வாய்ப்புக்களை எவ்வாறு அணுகுதல் தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர்களான கௌரவ M.இந்திரபாலா, பரணீதரன் ஆகியோரும் ஜெர்மன் TARA நிறுவனத்தின் இயக்குனர்களான திரு. மார்டீன், திருமதி. ஜெயசீலா, திரு. கபிலன், மற்றும் யாழ் பல்கலைக்கழக பட்டப்படிப்பின் பீடாதிபதி சிரேஸ்ட பேராசிரியரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆலோசகருமான மதிப்பிற்குரிய திரு. வேல்நம்பி அவர்களும் , புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களான செல்வி. திலகவதி, மற்றும் திரு. விஜயலாதன், திருமதி. கரிகரசுதா, திரு. கருணாகரன், திருமதி. தர்சினி , பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் முயற்சியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர். பல வழிகளிலும் சந்தைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு எமது இயக்குனர்களும், மாணவப்பிரதிநிதிகளும் முயற்சி செய்துவருகின்றனர். விடுமுறையில் நாடுதிரும்பும் அனைத்து உறவுகளிடமும் நாம் உரிமையோடுகேட்டுக்கொள்வது, அவர்களின் ஓவியங்களையோ, கைப்பணிப்பொருட்களையோ, பற்றிக் ஆடைகளையோ, நெசவு ஆடைகளையோ பெற்றுக்கொள்வதன்மூலம் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்





Previous Post
Next Post
