வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்
வலுவவிழப்புக்குள்ளானவர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்கள், பல்கலைக்கழகமாணவப்பிரதிநிதிகள், மற்றும் எமது நிறுவனத்தின் நலன்விரும்பிகள், எம்மோடுபயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிற்கிடையில், எமது கிளிநொச்சி பராமரிப்பு இல்லத்தில் 09/07 அன்று, சிறப்புற இடம்பெற்றது.
இதன்போது, புதியவாழ்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அங்கிருக்கின்ற வலுவிழப்புக்கு உள்ளான, எமது உறவுகளின் உடல் உள நலன்கள் தொடர்பாகவும், எமது இல்லத்தைத்தாண்டி வெளியில் இருக்கும் விசேட தேவை உடைய உறவுகளுக்கு, எவ்வாறான தொழில்நுட்ப ரீதியான வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும் என்பது தொடர்பாகவும், அதைத்தாண்டி எமது நிறுவனத்தோடு பயணிக்கும் முயற்சியாளர்களின், பொருட்களிற்கான சந்தைவாய்ப்புக்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் மிகத்தெழிவாக்க்கலந்துரையாடப்பட்டது,
குறித்த கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் தலைவர் சு.துஸ்யந்தன் உப தலைவர் ப.தர்சினி, இணைப்பாளர் வி. விஜயலாதன், உப செயலாளர் செ.கருணாகரன், இயக்குனர் து. திலகவதி, மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள், பிரித்தானியா அறம் Intiative அமைப்பினர், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் மற்றும், உபதலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர், மற்றும் சமூக நலன்விரும்பிகளும் , மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து தமது கருத்துக்களைத்தெருவித்திருந்தனர், பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கொள்வதோடு, காலதாமதம் இன்றி செயல்படவேண்டும் என அறம் அமைப்பினரிடம் கேட்டுநிற்கின்றோம் 🙏





Previous Post
