புதிய வாழ்வு நிறுவனத்தினால் ‘NLF Fashion’ விற்பனை நிலையம் திறந்து வைப்பு!!
எமது நாட்டின் வளங்களைப்பயன்படுத்தி, எமது முயற்சியாளர்களால் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான சந்தைவாய்பானது பெரும் சவால்களுக்கு முகம் கொடுப்பதால் ஒரு சிறிய முயற்சியாக, உள்ளூர் உற்பத்திகளைச்சந்தைப்படுத்தும் நோக்கில் புதிய வாழ்வு நிறுவனத்தினால் ‘NLF Fashion’ எனும் சிறிய விற்பனை நிலையமானது, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில் 23.01.2025 அன்று கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான செல்வி திலகவதி துரைச்சாமி அவர்களின் தலைமையில், மாவிட்டபுரக்கந்தனின் ஆசீர்வாத்த்துடன் பொங்கல் விழாவும், திறப்புவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆலோசகருமான மதிப்பிற்குரிய தி.வேல்நம்பி அவர்களும் கௌரவ விருந்தினராக புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்த கல்லூரி அதிபரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவருமான மதிப்பிற்குரிய சி.திரிகரன் அவர்களும், சிறப்புவிருந்தினர்களாகயாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் 89 ம் அணி பழையமாணவிகளும், வலிகாமம் உதவி பிரதேச செயலாளர் அவர்களும் புதியவாழ்வு நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. வி.சு.விஜயலாதன் அவர்களும் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்,
“ நாட்டிற்குச்சென்றோம் நாம் சந்தோசமாக இருந்தோம், மீண்டும் திரும்பினோம் என்று இல்லாது, போனோம் தடம் பதித்தோம் எமது மக்களையும் மண்ணையும் மறவோம் என உறுதியளித்து வந்த யாழ் வேம்படி மகளிர் பழையமாணவிகளிற்கு இதயபூர்வ நன்றிகளைத்தெரிவிப்பதோடு, எம்மோடு உறுதுணையாக தொடர்ந்தும் கைகோர்க்கவேண்டும் எனகேட்டு நிற்பதோடு, தகுந்த நேரத்தில் தையல் வேலைகளை சரி,பிழைபார்த்து வழிநடாத்தி இந்தத்திறப்புவிழாவிற்கு உதவிபுரிந்த திருமதி Y. பிறேமா அவர்களுக்கும் , பங்கு பற்றிய அனைத்து மதிப்பார்ந்த விருந்தினர்க்கும், நல்ல சிந்தனையோடு கலந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களிற்கும், உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் , ஒழங்கமைப்புச்செய்த எமது இயக்குனர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைப்புதிய வாழ்வு நிறுவனத்தின் சார்பிலும், உற்பத்தியாளர்கள் சார்பிலும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம் 🙏
அழகான தேசம் அமையும்வரை
அயராது உழைப்போம் 🥰🙏





Previous Post
Next Post
