Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களுக்கு உதவி!

சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, சந்தைவாய்ப்புக்களை ஊக்குவிப்பதன்மூலம், பொருளாதார நெருக்கடிகளை ஒரளவு சமாளிக்கும் நோக்கில் மணியந்தோட்டத்தைச்சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பங்களில் 5 அங்கத்தவர்களை இணைத்து அவர்களுக்கான மூலப்பொருள் கொள்வனவிற்காக 3,00,000/- மூன்று இலட்சரூபாவினை ஊக்குவிப்புத்தொகையாக, புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா கிளையானது வழங்கியிருந்தது, மிகச்சிறப்பாக இணைந்து செயல்படும் வானவில் பெண்கள் குழுவிற்கு வாழ்த்துக்களைத்தெரிவிப்பதோடு, வேலைத்திட்டங்களை உருவாக்கி, வேலைவாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் தலைவர் திரு. கி. நாதன் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா கிளையானது திறம்பட இயங்குவது கண்டு மனமகிழ்வடைவதோடு, இயக்குனர்சபைக்கும், கனடாவாழ் ஆதரவாளர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவுத்துக்கொள்கின்றோம் 👏👏🙏

தொழில் நுட்பங்களைப்பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் வேலைவாய்ப்புக்களை உருவாக்க எண்ணியுள்ளோம், எம்மோடு இணைந்து உங்களின், அறிவு, ஆற்றல், ஆதரவை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டு நிற்கின்றோம் 🙏

Comments are closed.