Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் நூல் வெளியீடும் -2024

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தினால் 2024 ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் தினமானது யாழ்ப்பாணப்பிரதேச செயலக திறந்த வெளியரங்கில் 03/12/24 பிரதேச செயலாளர் திருவாளர் எஸ். சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விலே பிரதமவிருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுனர் கௌரவ.நாகலிங்கம் வேதநாயன் அவர்களும் சிறப்புவிருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சமூக வைத்திய உத்தியோகத்தர்கள் Dr. திருநாவுக்கரசு ராகுலன், Dr. சிவகுமார் தர்சினி மற்றும் சித்த மருத்துவ உத்தியோகத்தர் Dr. தயாளினி குகேந்திரன் அவர்களும் கலந்து விழாவைச் சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வானது மாற்றுத்திறனாளிக் கலைஞர்களுடைய முயற்சியினால் அவர்களுடைய திறன்களினால் உருவாக்கப்பட்ட ஆக்கங்களைக்கொண்ட “புதுப்பிரபாகம் 2” எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலானது குற்றெழுத்து முறையிலும், செவிநுகர் சஞ்சிகையாகவும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விலே பல்வேறுபட்ட கருத்துக்களாக மாற்றுத்திறனாளிகளை முன்னேற்ற வேண்டும் என்ற தொனிப்பொருளில் கல்வி, கலை, விளையாட்டுப் போன்ற துறைகளில் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிக்கலைஞர்கள் எமது சமூகத்தில் முக்கியமான சக்திகளாக இருந்துவருகின்றார்கள் என்ற தொனிப்பொருளோடும் அன்றைய விழாவானது மதிய நேர விருந்தோடும் நிறைவுபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உறவினர்களும் மற்றும் அரச அதிகாரிகளும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும்கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
இந்த நிகழ்விலே வெளியிடப்பட்ட “புதுப்பிரவாகம் 2” என்ற நூலுக்கான அனுசரணையைப் புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடாக் கிளையானது பெருமனதோடு வழங்கியிருந்தது. என்பதோடு புதுப்பிரவாகம் 1 இற்கான அனுசரணையைக் கடந்தவருடம் பொறுப்பேற்றது என்பதும் இங்கேகுறிப்பிடத்தக்கது.

இத்தருணத்தில் கனடாகிளையின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் நன்றிகூறுவதோடு, தேவையறிந்து சேவையாற்றும் யாழ்மாவட்ட பிரதேச செயலக அனைத்து ஊழியர்களுக்கும், பங்குபற்றிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும் அத்துடன் புதிய வாழ்வு நிறுவனத்தின் சார்பில் கலந்து நிகழ்வைச்சிறப்பித்த பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் தலைவர் திரு. வி. சு. விஜயலாதன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Comments are closed.