Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தென்னஞ்சிரட்டைகளில் கைவினை பொருட்களை செய்யும் நபருக்கு உதவித்திட்டம் !

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”

உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வித்தகன் அவர்கள், தனது பெயருக்கேற்றவாறு திறமையைத் தன்னுள் கொண்ட ஒரு சிறந்த கைவினைக் கலைஞன் என்பதை அவரின் உற்பத்திகளே காட்டி நிற்கின்றன. இவரின் திறமைக்கு 6 தடவைகள் ஜனாதிபதி விருதும், 56 தடவைகள் மாகாண மட்டத்திலான விருதுகளையும் தட்டிச் சென்ற சாதனையாளன் என்பதுடன், பல உள்ளூர் கைவினைக் கலைஞர்களை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். இவ்வாறான முயற்சியாளர்களுடன் பயணிப்பதும், அவர்களை ஊக்குவிப்பதும் எமது கடமையாகும்.

தென்னஞ்சிரட்டைகளில் பலவகையான கண்கவர் பெண்களுக்கான ஆபரணங்கள், சுவர் ஓவியங்கள், வீடுகளை அலங்கரிக்கும் அழகுப் பொருட்கள், சமையலறைக்குத் தேவையான கரண்டிகள், அகப்பைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை உருவாக்கி, உள்ளூரில் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார்.

இப்போது வித்தகன் அவர்களின் உற்பத்திகள் இலண்டன் சந்தையையும் நோக்கி பயணிக்கத் தயாராக இருப்பது மிகுந்த பெருமைக்குரிய விடயமாகும். தரமான உற்பத்திகளுக்கு எப்போதும் சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்பதற்கு இவரே சிறந்த சான்றாக திகழ்கிறார்.
இவரின் உற்பத்திகளைப் பெற்று கடைகள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்து எம்மை அணுகியதுடன், வித்தகன் அவர்களின் உற்பத்திகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தேவையான கடைச்சல் இயந்திரத்தையும் பெற்றுக்கொடுத்த திருமதி. மலர் மேகன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

அதேநேரம், இந்த திறமைசாலியை இனங்கண்டு எமக்கு அறிமுகப்படுத்திய எமது செயலாளர் திருமதி. ச. கரகரசுதா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எமது தொடர்ச்சியான முயற்சியாகும். உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் நாமும் பங்கெடுப்பதே எமது நோக்கமாகும்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நினைப்பவர்களில் ஒருவரா நீங்கள்?
இந்தப் பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்வதன் மூலம், மேலும் பல வாய்ப்புகள் உருவாக உங்களாலும் உதவ முடியும்.

Comments are closed.