Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பெண் முயற்சியாளருக்கு தையல் உபகரணங்கள் வழங்கல்

வவுனியா மாவட்டம், முதலியார்குள கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி நி. தர்சினி அவர்கள் எம்மோடு பயணிக்கும் துணிச்சல்மிக்க மாற்றுத்திறனாளிப் பெண்களில் ஒருவராவார். கால் இல்லையென சோர்ந்துவிடாது, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக , பல்வேறு திறமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள அவர், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் முன்னேறத் துடிக்கும் ஒரு முயற்சியாளராகத் திகழ்கிறார்.

தையல், முக அலங்காரம், ஆரி வேலைப்பாடுகள், கலாச்சார ஆடைகள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்கான ஆடைகளை வடிவமைக்கும் திறமையைத்தன்னகத்தே கொண்டுள்ள ஒருவராவார், அவரின் சுயதொழில் கனவை நனவாக்குவதற்கு எமது நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தமைக்காக மகிழ்ச்சியடைகின்றோம்.

அவருக்கென தனியான தொழில் நிலையம் ஒன்றை நிறுவுவதற்குத் தேவையான துணிகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவியை கனடா புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குநர் சபை வழங்கியிருந்தது. மேலும், கடைக்கான முற்பணத்தை மலேசியாவில் வசிக்கும் திருமதி த.உதயராணி அவர்கள் வழக்கியிருந்தார், 30/05/26 கடை திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றதாகவும் தனது வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த கனடா புதிய வாழ்வு நிறுவனத்திற்கு தனது அன்பையும் நன்றியையும் தெரிவித்தார் தர்சினி.

இந்தச்செயல்திட்டத்திற்காக உழைத்த அனைத்துநல்லுள்ளங்களிற்கும் இதயபூர்வ நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.

Screenshot

Comments are closed.