Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தையிட்டியில் உள்ள பெண்கள் குழுவிற்கு விவசாய உள்ளீடுகள் வழங்கல்

பிறந்தநாள் நினைவாக சமூக நல உதவிகளை வழங்கிய அமெரிக்காவைச்சேர்ந்த திருமதி. வாகினி ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

செல்வி. மாயா ரொய் அவர்களின் 10வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய வாழ்வு நிறுவனத்தின் ஊடாக தையிட்டி பராசக்தி சிறுவர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களும், சிற்றூண்டிவகைகளும் வழங்கியதுடன் சிலமாணவர்களுக்கு பற்றிக ஆடைகளும் வழங்கப்பட்டன.

அதேநேரம் மாயா ரொய் அவர்களின் தாத்தாவான திரு. மகேஸ் தியாகராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மீளக்குடியேறிய தையிட்டி பகுதியில் உள்ள பெண்கள் குழுவிற்கு மஞ்சள், இஞ்சி விதைகளுடன் 130 முருங்கை மரக்கன்றுகளும், வழங்கப்பட்டன.
இவர்களின் பிறந்தநாள் நினைவாக சமூக அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த உதவித் திட்டத்திற்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எமது அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Screenshot

Comments are closed.