Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

டித்வா புயலின் பாதிப்புக்குள் சிக்கிய மாணவர்களுக்கு சீருடை வழங்கல் !

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு”
மத்திய மாகாணம், கண்டிமாவட்டத்தில் கம்பளை எனும் கிராமத்தில், அறிவுப்பசி போக்கும் மத்திய இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர் மதிப்பிற்குரிய M. நேரு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, டிக்வா புயலின் பாதிப்புக்குள் சிக்கிய மாணவர்கள் தமது சீருடைகளை இழந்து, சொத்துக்களை இழந்து தவிப்பதாகவும், அவர்களின் இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, அவர்களுக்கான சீருடைகளை எம்மிடம் எதிர்பார்ப்பதாக மிகுந்த அக்கறையுடன் கேட்டிருந்தார், இத்தேவையைப் பூர்த்திசெய்ய உடனடியாக செயல்பட்ட திருமதி N. மலர் அவர்கள் தனது கென்ற் பகுதியில் வாழும் தமிழ்மக்களின் ஆதரவோடு நிதிதிரட்டியிருந்தார், டுபாயில் இருக்கும் பொறியியலாளர் தம்பி நந்தன் அவர்களும் தனது ஆதரவுக்கரத்தை நீட்டியிருந்தார், இத்திட்டம் வெற்றிபெற எம்மோடு கரம்கோர்த்த, அனைத்து உறவுகளுக்கும் நன்றி,கல்விச் செயல்பாடுகளை மிகச்சிறப்பாக செய்துவரும் நோர்வேக்கிளையானது, இத்திட்டத்தினையும் சிறப்புற ஒழுங்கமைத்து செயல்படுதியது, நோர்வே கிளையின் இயக்குனர்களிற்கு இதய பூர்வமான நன்றிகளைத்தெரிவிப்பதில் மன மகிழ்வடைகின்றோம்.

Screenshot

Comments are closed.