Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

“Shakti The Goddess of Power” நிதி திரட்டும் நிகழ்வு

பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் எமது நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக, Bharatha Arangam Dance Institute தனது மாணவர்களை ஒருங்கிணைத்து சிறப்பான நடன நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

“Shakti The Goddess of Power” எனும் இந்த நிதி திரட்டும் நிகழ்வின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது, New Life Foundation ஊடாக பெண்களுக்கான தொழில் பயிற்சிகளான பற்றிக் அலங்காரப்பயிற்சி மற்றும் கைத்தறி நெசவு பயிற்சிகளை வழங்குவதன்மூலம் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த அர்த்தமுள்ள முயற்சியை முன்னெடுத்து ஆதரவு வழங்கிய Bharatha Arangam Dance Institute நிறுவுனரும் எமது New Life Foundation USA இன் உபதலைவருமான மதிப்பிற்குரிய திருமதி பிறேமினி தனன், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் அனைத்து நலன்புரி உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தூரத்தையும் கருத்தில் கொள்ளாது நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர் திரு. கந்தசாமி ஜெய ஆனந்தன் மற்றும் பொருளாளர் திரு. சின்னராஜா வசீகரன் ஆகியோரும் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர், எமது தேசத்துமக்கள் மட்டுமன்றி பிறநாட்டு மக்களும் எமது பெண்களிற்கு கைகொடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடும் ஆவலோடும் பங்குபற்றியமைக்காக எமது நிர்வாகம் தலைதாழ்த்தி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து நிற்கின்றது.

அமெரிக்காவில் ஒரு நிகழ்வு நடத்துவதென்பது சாதாரணவிடயமல்ல தனது முழுநேர அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வெற்றிகண்ட திருமதி த. பிறேமினியின் ஆளுமை பாராட்டுதற்குரியது. இவர் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி என்பதில் பெருமையே
பெண்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைவோம்.

Screenshot

Screenshot

Screenshot

Screenshot

Screenshot

Comments are closed.