தெனியாயவில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கல்
புதிய வாழ்வு நிறுவனம் பெருமைப்படும் தருணமும், எதிர்பார்த்த தருணமும் இதுவே. எதிர்காலச் சந்ததியினரை எம்மோடு இணைத்து ,அவர்களின் திறமை, வழிகாட்டல்களின் மூலம் எமது தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதுடன், அவர்களுக்கு இடையிலான இணைப்பை ஏற்படுத்தவேண்டும் எனவும் நாம் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றதால் மகிழ்ச்சியடைகின்றோம் Dr. Sylvia Gobiranjan இலண்டனில் பிறந்துவளர்ந்தாலும் தனது முதலாவது ஊதியத்தில் இருத்து எமது தேசத்து மாணவர்களுக்கான கல்விக்கு உதவுமாறு £150 களை தந்துதவியுள்ளார்.
இந்த நிதியானது இரத்தினபுரி, அனிந்கந்த தோட்டம், தெனியாய வில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களிற்காக மகிழ்வுடன் வழங்கப்பட்டது . எமது தாய்நாட்டையும், எமது வரலாறையும் சொல்லி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு எமது நிறுவனம் தலைசாய்த்து நன்றிகளைத்தெரிவித்து நிற்கின்றது.
நிதி உதவிசெய்த ,Dr. Sylvia Gopyranjan இற்கும், அந்த நிதிக்கான கல்வி உபகரணங்களை, மாணவர்கள் கைகளில் சேர்ப்பதற்காக செயல்பட்ட புதிய வாழ்வு நிறுவனம் நோர்வே கிளைக்கும், மாணவர்களுக்கான தேவையை எமக்கு அறிவித்த அருட்தந்தை அ. ஜேசுதாசன் அவர்களுக்கும் , எமது இதய பூர்வ நன்றிகளைத்தெரிவித்து நிற்கின்றோம்.




Previous Post
Next Post
