மன்னார் அந்தோனியர் புரம் அ.த.க. பாடசாலையின் பரிசளிப்பு விழா
28.05.25 புதன்கிழமை மன்னார் அந்தோனியர் புரம் அ.த.க. பாடசாலையில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு விசு. விஜயலாதன் பிரதமவிருந்தினராகவும் உப செயலாளர் திரு கருணாகரன் மேலும் மன்னார் தொழிலதிபர்கள் சிறப்பு விருந்தினர்களாவும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந் நிகழ்விலே இப் பாடசாலையில் புலமைப்பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு புதிய வாழ்வு நிறுவனம் நோர்வேக்கிளையால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது. இதற்கு நிதி அனுசரணை வழங்கியவர் இலண்டனில் வசிக்கும் திரு. சிவா. கிருபாகரன் ஆவர். இம்மாணவி எம்மால் நடத்தப்பட்ட அந்தோனியர் புரம் மாலைநேர வகுப்பிலும் கல்வி கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நேரத்தில் கல்வி நிலைய ஆசிரியர் திருமதி.சுகன்யாவுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்வைச் சிறப்பாக ஒழுங்கமைத்த அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பரிசளிப்பு விழாவில் விருந்தினர்கள் வரவேற்பு
இணைப்பாளர் திரு. விசு.விஜயலாதன்
அதிபர் திருமதி அ.கஜேஸ்வரா பரிசளிப்பு விழாவில்











Previous Post
Next Post
