கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கான கௌரவிப்பு
09.05.25 அன்று கிளிநொச்சி முக்கொம்பன் மகாவித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப் பரிசிற் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
இந்நிகழ்விலே 30 மாணவர்களுக்கு பள்ளிப்பைகள் புதிய வாழ்வு நிறுவனம் நோர்வேக்கிளையால் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் நோர்வே Furuset ஒன்றிய மகளிர் அத்துடன் நோர்வே உறவுகள். இந் நிகழ்வில் எமது நிறுவனம் சார்பாக சிறப்பு விருந்தினராக எமது இணைப்பாளர் திரு விஜயலாதனும் கிளிநொச்சி உப செயலாளர் திரு கருணாகரனும் கலந்து சிறப்பித்து பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
நிதிப்பங்களிப்புச் செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் அகமது நிறுவனம் சார்பாக சிரந்தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🏽🙏🏽
பிற்குறிப்பு: பாடசாலையின் அனுமதியுடனே இங்கு படங்கள் பதிவிடப்படுகின்றன.


















Previous Post
Next Post
