Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பாரம் தூக்கும் சிறிய இயந்திரம் வழங்கிவைப்பு!!

எம்மோடு ஆரம்பகாலத்தில் இருந்தே பயணிக்கும் திருமதி செல்வராசா வசந்தகுமாரி என்கின்ற உள்ளூர் உற்பத்தியாளர், மிகச்சிறப்பாக தன்னை அர்ப்பணித்து செயல்படுவதுடன், 15 நலிவுற்ற குடும்பங்களிற்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளார் என்பது, வியப்பான விடயம்.

சிறந்த ஆளுமையும், விடாமுயற்சியும் கொண்ட வசந்தா, தான் மண்மீதும், மக்கள்மீதும் கொண்ட பற்றே தனது வளர்ச்சிக்குக்காரணம் என மிகப்பெருமித்த்துடன்கூறுகின்றார், வேறு சிலதொண்டு நிறுவனங்களும் தனது வளர்ச்சிக்கு உதவியதாக்க்கூறும், வசந்தாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பாரம் தூக்கும் சிறிய இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக இரண்டு இலட்சம்ரூபா வழங்கப்பட்டது.

இந்த இயந்திரக்கொள்வனவிற்கான நிதியை ஏற்பாடுசெய்துதந்த புதிய வாழ்வு நிறுவனத்தின், வேலைத்திட்ட நிர்வாக உறுப்பினர் திரு. அகஸ் ரீன் ஞானமணி தினேஷ் செல்வன் அவர்களுக்கும், நிதியைத்தந்துதவிய தாயகத்தில் தொடர்ந்தும் மக்கள் நலன்கருதி, பல வேலைத்திட்டங்களைச்செய்துவரும் “ தாயக உறவுகள்” அமைப்பினரிற்கும் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்🙏..

வசந்தாவின் உற்பத்திகளான, தும்பு, கயிறு, கால்மிதி, போன்றவை தேவைப்படுவோர் கொள்வனவு செய்து அவருக்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்🙏

முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைகள் தொடரும்…

Comments are closed.