சிலைகள் வடிக்கக்கூடிய சிறந்த கலைஞனை ஊக்குவிப்பு வழங்கிவைப்பு!!
மிகவும் கலைநயமாகவும்,தத்துருவமாகவும் சிலைகள் வடிக்கக்கூடிய எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளில் ஒருவரான திரு. சி.அமலைநாதன் என்ற சிறந்த கலைஞனை ஊக்குவிக்கும் நோக்கில் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் ஹாட்ஸ் தமிழ் ஒன்றியம் ( Tamil Union of Herts – UK ) £500 களை வழங்கியுள்ளது.
இந்த நிதிகிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த திரு. தேவராசா காண்டீபன் அவர்களுக்கும், அனைத்துவழிகளிலும் நிறுவனத்திற்கான திட்டங்களை தேவையின் அடிப்படையில் தெரிவுசெய்து, முனைப்புடன் அவற்றை செய்து முடிக்கும் திரு. வி. விஜயலாதன் அவர்களுக்கும், எமதுவேலைத்திட்டங்களின் தேவைகருதி உடனடியாக உதவிக்கரம் நீட்டிய ஜக்கிய இராட்சியம் ஹாட்ஸ் தமிழ் ஒன்றியத்திற்கும் இதய பூர்வ நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம்,
இந்த ஒன்றியமானது தமிழ், தமிழர் கலாசாரத்தை வளர்க்க உதவுவது மட்டுமன்றி தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் முனைப்புக்காட்டுவது பாராட்டத்தக்கது 👏👏 நன்றிகளும், பாராட்டுக்களும் 🙏
இது போன்ற ஓவியங்கள் தேவைப்படுவோர், இந்த முயற்சியாளனுக்கு அந்தச் சந்தர்ப்பத்தைக்கொடுக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி





Previous Post
Next Post
