அமரர் திரு. ஜனார்த்தனன் சோமாஸ்கந்தன் அவர்களின் நினைவை முன்னிட்டு உதவி திட்டங்கள்!!
அமரர் திரு. ஜனார்த்தனன் சோமாஸ்கந்தன் அவர்களின் 45 ம் நாள் நினைவை முன்னிட்டு, கல்முனை பண்டிருப்பைச்சேர்ந்த பெண்தலைமைக்குடும்பமான திருமதி இ. மதிவதனி என்கின்ற பெண்முயற்சியாளரிற்கு நெசவு தறியும், நூல்களும் வழங்கி அவரின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்ததோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்விவளர் நிலையம் மற்றும் சாந்த புரத்தில் இயங்கிவரும் சாந்தன் முன்பள்ளியில் உள்ள சிறார்களுக்கும் மதிய உணவு வழங்கியதோடு ஆத்ம சாந்திப்பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அன்னாரின் ஆத்மசாந்திக்குப் பிரார்த்தனை செய்வதோடு, பெரும் துயரில் தவிக்கும் அமர்ர் ஜனார்தனனின் குடும்பத்திற்கும் கரம்பற்றி ஆறுதல்கூறி நிற்கின்றோம் 🙏
மேற்படி திட்டங்களிற்காக நிதி உதவி வழங்கிய அன்னாரின் குடும்பத்தினரிற்கு நன்றிகளைத்தெரிவித்து நிற்கின்றோம் .
மேலும் எம்மோடு பயணிக்கும் மட்டக்களப்பைச்சேர்ந்த பெண்முயற்சியாளர்களின் நெசவுசாறிகள் சிலவற்றையும் உங்கள் பார்வைக்காக இங்கே பதிவிடுகின்றோம், இவற்றிற்கான சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க இயலுமானவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்..
மத: +94 75 580 6854
கென்கா : +41 77 499 16 63
அன்பான உறவுகள் அனைவரையும் எமதுபதிவுகளை உங்களின் நண்பர்களோடு பகிர்வதன்மூலம் முயற்சியாளர்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குமாறு உரிமையோடு கேட்டுநிற்கின்றோம் 👍🙏





Previous Post
Next Post
