யாழ் பல்கலையில் “மாற்றாற்றலர் தினம்”
புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா மற்றும் அமெரிக்கா கிளைகளின் நிதிப்பங்களிப்பில் 17.01.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பி.ப 2.00 மணியளவில் “மாற்றாற்றலர் தினம்” முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருட வரலாற்றில் (01.08.1974) முதல் முறையாக ஆவணப்படுத்தக் கூடிய வகையில் எமது நிறுவனத்தின் ஊடாக இந்த நிகழ்வுக்காக நிதி அனுசரணை வழங்கப்பட்டது.
இது பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெரும் முயற்சியினாலும் இவர்கள் சார்ந்த நலனில் அக்கறை உள்ள கல்வி சார், கல்வி சாரா அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆகும்.
எனவே இவர்களைத் தொடர்ந்தும் இனிவரும் காலங்களில் எமது நிறுவனம் ஆதரவுக் கரம் கொடுக்கும். இந் நிகழ்வானது மாற்றுத்திறனை அணுகுதல் மற்றும் உள்ளீர்த்தலுக்கான குழுவின் தலைவி திருமதி கோசலை மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரவ சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா , கலைப் பீடாதிபதி மதிப்பார்ந்த பேராசிரியர் திரு. சிவசுப்பிரமணியம் ரகுராம் , புதியவாழ்வு நிறுவனத்தின் அங்கத்தவர்கள் மற்றும் மாற்று ஆற்றலர்களுக்கான நிறுவனத்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்த அதேவேளை, கலை இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படவேண்டிய மிக முக்கிய நிகழ்வாக இது பதியப்படும் என்பதில் ஐயம் இல்லை 🙏





Previous Post
Next Post
