கலைவாணி முன்பள்ளி புணர்நிர்மாணம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்விக்காக கையளிக்கப்பட்டது
புதிய வாழ்வு நிறுவனத்தின் மலையக்க்கல்வி அபிவிருத்தி எண்ணக்கருவிற்கு அமைவாக பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இயங்கி வந்த கலைவாணி முன்பள்ளி, லோவர் கிறன்லி, அக்கரபத்தனை புணர்நிர்மாணம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்விக்காக 19/03/2024 கையளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஊடாக வகுப்பறை மற்றும் கூரைகள் திருத்தப்பட்டதுடன் வர்ணம் பூசப்பட்டு மாணவர்கள் ஆரோக்கியமாக கற்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தோட்ட முகாமையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், தோட்ட அதிகாரிகள், புதிய வாழ்வு நிறுவனத்தின் பல்கலைக்கழக மாணவப்பிரதி நிதிகள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆபத்தான நிலைமையில் காணப்பட்ட இக் கட்டிடம் இன்று மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றியமைக்க உதவிய கனடா புதிய வாழ்வு நிறுவனத்திற்கு பொது மக்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர், தேவையறிந்து உதவிபுரிந்த கனடா புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்சபைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.






Previous Post
Next Post
