Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழா!!

புதிய வாழ்வு நிறுவனம் கனடாவும் , சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது 16/09/2023 இல் ராஜா சரஸ்வதி மண்டபத்தில், புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர் திரு. பா.பார்த்தீபன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய முனைவர் திரு.திருநாவுக்கரசு கமலநாதன் ( யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி )அவர்களும், சிறப்புவிருந்தினராக திரு. பொன்.ஶ்ரீவாமதேவன்( போதனா ஆசிரியர் யாழ் பல்கலைக்கழகம்) , கௌரவ மருத்துவ கலாநிதி திரு.திருமதி. ஜெயதேவி கணேசமூர்த்தி ( ஜேய்ப்பூர் மாற்றுவலுவுடையோரக்கான புனர்வாழ்வு நிலையத்தின் தலைவர்) , மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. சி. ரகுராம் (கலைப்பீடாதிபதி யாழ் பல்கலைக்கழகம் ), திரு. விஸ்னுகரன் (உதவிக்கல்விப்பணிப்பாளர் விசேட கல்வி) மதிப்பிற்குரிய திருமதி. வி். சிவகுமார் ( ஸ்தாபகர் ஆறுமுகம் விசாகரட்ணம் அறக்கட்டளை) மற்றும் செல்வி ர. ஸகிஸ்ணா ( தலைவர் , ஸ்தாபர் சாவிகா சங்கீத அறிவாலயம் ) ஆகியோர் பங்குபற்றி மிகச்சிறப்பாக இந்நிகழ்வை நடாத்தியிருந்தனர்,

இந்த நிகழ்விற்கான அனைத்துச்செலவீனத்தையும் பொறுப்பேற்ற கனடா புதிய வாழ்வு நிறுவன இயக்குனர்களுக்கு நன்றிகளைத்தெரிவிப்பதோடு, மதிப்பிற்குரிய அன்பார்ந்த திரு. சி. சணமுகநாதன் ( ராஜா குளிர்களி உரிமையாளர்) அவர்கள் எமது இந்த நிகழ்விற்காக இலவசமாக மண்டபத்தை தந்துதவியதோடு, நிகழ்வுக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கிய சண்முகம் அண்ணாவிற்கு இதய பூர்வ நன்றிகள், அத்துடன் பங்குபற்றி சிறப்பித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுத்திறனாளிக்குழந்தைகள். பெற்றோர், சாவிகா சங்கீத அறிவாலய இயக்குனர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து நலன்விரும்பிகள் அக்கறை உடையோர் அனைவருக்கும் சிரம் தாழ்த்திய இதய பூர்வ நன்றிகள்

Comments are closed.