Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

வடமாகாணத்தில் முதல்முறையாக விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டி

வடமாகாணத்தில் முதல்முறையாக வலுவிழப்பிற்கு உள்ளான, விசேட தேவையுடையோருக்கான இசைப்போட்டியானது, புதியவாழ்வு நிறுவனத்தின் நிதி அனுசரனையுடனும் சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டிலும் 15/04/23 அன்று நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமவிருத்தினராக விஸ்வலிங்கம் விஷ்னுகரன் (உதவிக்கல்வி பணிப்பாளர்,வடமாகாண விசேட திணைக்களம்) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தவத்திரு வேலன் சுவாமிகள் ( முதல்வர் சிவகுரு ஆதீனம் ) மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதியும் , தலைசிறந்த சமூக சேவையாளருமாகிய திருமதி .ஜெயதேவி கணேசமூர்த்தி ( தலைவர் ஜெயப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம்)திரு ஆறுமுகராஜா பாலச்சந்திரன் (அதிபர் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயம் ) திரு.பாஸ்கரன் பார்த்தீபன் (தலைவர் புதியவாழ்வு நிறுவனம் )
திரு.விஜயகுமார் விஜயலாதன் (திட்ட ஒருங்கிணைப்பாளர் புதியவாழ்வு நிறுவனம் ) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியின் நடுவர்களாக திருமதி வாசஸ்பதி றஜீந்திரன்(சாரங்கம் இசைமன்றத்தலைவர் ) திரு.சுரசாஹித்தியன் றஜிந்திரன் (நாதஸ்வர வித்துவான் )
திருமதி.குமுதா உமாகாந்தன் (ஆசிரியையாழ்சென்ஜோன்ஸ் கல்லூரி)
செல்வி நிரஞ்சலா சுந்தரலிங்கம் (வயலின் ஆசிரியை)
திருமதி.அபிராமி சுதன் (ஆசிரியை யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுக்கு உறுதுணையாக சிறகுகள் அமையம் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் பார்வையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றுதழ்கள் வழங்கப்பட்டது.

பங்குபற்றி வாழ்த்திச்சென்ற அனைவருக்கும் இதயபூர்வ நன்றிகளைத்தெரிவிப்பதோடு, மிகத்திறம்பட முற்று முழுதான சேவைநோக்கோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்கில் களம் இறங்கிய இளையவர்களைக்கொண்ட சாவிகா சங்கீத அறிவாலயத்திற்கு நன்றிகளும் பாராட்டுக்களும், 👏👏🙏

Comments are closed.