சிறந்தமுறையில் நடாத்தப்பட்டுவரும் மன்னார் மாவட்ட கல்வி வளர் நிலையங்கள்!!
எமது நிறுவனத்தின் கல்விக்கு கைகொடுக்கும் முயற்சிகளில் ஒன்றான, கல்வி வளர் நிலையமானது, மன்னார் மாவட்டத்தில் யோசப்வாஸ் நகர், வளர்நகர், இலுப்பைக்கடவை, விடத்தல்தீவு போன்ற பின்தங்கிய கிராமங்களில் , கல்விக்கான நல்ல அத்திவாரத்தை அமைக்கும் நோக்கில் உருவாக்கி, மன்னார் மாவட்ட மக்கள், மதகுருமார்கள், அரச அதிகாரிகள் போன்றோரின் ஆதரவுடனும் ஆசியுடனும் திரு சுதர்சன் அவர்களின் மேற்பார்வையிலும் சிறந்தமுறையில் நடாத்தப்பட்டு வருகின்றது,
இந்தக்கல்வி வளர் நிலையங்களிற்கு தேவையான அனைத்து நிதித்தேவைகளையும், புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு. தர்மலிங்கம் பிரபாகரன் அவர்களே பொறுப்பேற்றுக்கொண்டார்,
பொதுநோக்கு, பொது சிந்தனை, மக்கள் நலன்மீது அக்கறை கொண்ட இயக்குனர்களின் இணைவே எமது நிறுவனத்தின் தனித்துவமும் வளர்சியும் 💪🏻🙏, நன்றி தம்பி பிரபாகரன் உங்களின் அர்ப்பணிப்பிற்கும் பங்களிப்பிற்கும் 🙏





Previous Post
Next Post
