மாணவர்களைக்கொண்ட 40 குடும்பங்களுக்கு சூரிய மின் ஒளியூட்டிகள் வழங்கிவைப்பு!!
எமது நிறுவனத்தின் கல்விக்குக்கைகொடுக்கும் திட்டத்தின் கீழ், கிழக்குப்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, வாகரைப் பிரதேசத்தில் கோமத்தலாமடு எனும் கிராமத்தில் மின்சாரப்பாவனை இல்லாமல், பலசிரமங்களை எதிர்நோக்கும் , குறிப்பாக தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களைக்கொண்ட, 40 குடும்பங்களுக்கு சூரிய மின் ஒளியூட்டிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இச் செயற்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை அமைப்பினருக்கும், மின்சாரம் இல்லை என்பதோடு, மண்ணெண்ணையும் தட்டுப்பாடு என்பதால் இரவில் முளிப்பிருந்து கல்விகற்க முடியாமல் துன்பப்படுவதை எமது மாணவப்பிரதிநிதிகள் திரு. பா. பாலரவிஅண்ணா அவர்களுக்கு தெருவித்தபோது, உடனடியாக ஏற்பாடு செய்துகொடுத்தமைக்கு நன்றிகள்🙏 ,
நிதி உதவி செய்த ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளைக்கும் , ரவி அண்ணா அவர்களுக்கும், முன்னின்று சிறப்பாக நடாத்திய கிழக்குப்பல்கலைக்கழக மாணவன் பரஸ்காந்த், மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெருவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
