மரவள்ளி நடுகையின் ஆரம்ப கட்ட நிகழ்வு
புதிய வாழ்வு நிறுவனத்தின் தன்நிறைவு பொருளாதாரம் நோக்கிய விவசாய செய்கையினை மேம்படுத்தும் நோக்கிலும், எமக்கான உணவிற்கு நாமே வழிவகுப்போம் எனும் நோக்கிலும் , 17 /06 /22 அன்று மன்னார் மாவட்டம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் , திட்டமிடல் அதிகாரிகள் உட்பட எமது நிறுவனத்தின் பணியாளர் திரு.ஐ.சுதர்சன் ஆகியோரும் கலந்து கொண்ட மரவள்ளியை நடுகையின் ஆரம்ப கட்ட நிகழ்வு இனிதே ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதனை எமக்கு ஒழுங்கமைத்து தந்த மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி.சைலாபானு அவர்களுக்கும் மாவட்ட செயலர் , பிரதேச செயலர் , திட்டமிடல் அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர் அனைவருக்கும் எம் நிறுவனம் சார்ந்த இதயபூர்வ நன்றிகளைத் தெரிவத்துக்கொள்கின்றோம்.





Previous Post
Next Post
