கட்டாய விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 150 குடும்பங்களிற்கு தலா ரூபா 15000!!
26.10.2022 அன்று காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டத்தின் விதாதா மண்டபத்திலும், மற்றும் காரைதீவு கமநல சேவைகள் திணைக்கள கட்டத்திலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு ,எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கட்டாய விவசாய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இவ்விரு பிரதேசங்களிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக 150 குடும்பங்களிற்கு தலா 15000 ரூபாவீதம் வழங்குவதற்கு தீர்மானித்திருந்தோம், அதன்படி, இந்நிதியை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு முடிவுஎடுக்கப்பட்டு அதன் முதல்கட்ட நிதியான ருபாய் 5000 வழங்கி வைத்தோம், இந்நிகழ்வில் விருந்தினர்களாக அரச அதிகாரிகளும், புதிய வாழ்வு நிறுவன பணியாளர்களும்,பொது அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த திட்டத்திற்கான நிதியினை புதிய வாழ்வு நிறுவனத்தின் இலண்டன் இயக்குனர் திரு மகேசன் அவர்களே பொறுப்பாக நின்று திரட்டித்தந்திருந்தார், மக்களின் பொருளா்தாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டத்தை பொறுப்பெடுத்து செயல்படுத்திய திரு. சு. மகேசனுக்கும், நோர்வே நாட்டு அறம் இளையோர் அமைப்பிற்கும், மற்றும் இத்திட்டத்தைச் செயல்படுத்த உதவிய அனைவருக்கும் எமது இதய பூரவ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
