Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு

05.07.2022 இல் , புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டும், தற்கால போக்குவரத்து பிரச்சனைகளைக்கருத்தில் கொண்டும் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஐந்து மாணவர்களிற்கு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள *”விழுது” அமைப்பின் அலுவலகத்தில் துவிச்சக்கரவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட மாணவப் பிரதிநிதிகளான *செல்வி மு.விஜயகலா , பி.சுஜிந்தா மற்றும் சர்மிளா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்விற்காக ஐக்கிய இராட்சியத்தில் இருந்து வருகைதந்திருந்த புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான மதிப்புக்குரிய திரு.சுப்பிரமணியம் மகேசன் ,மற்றும் அவரது மனைவி திருமதி.மகேசன் அவா்களும், மதிப்புக்குரிய முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவை உத்தயோகத்தர் *திரு.தசரதன்*, புதிய வாழ்வு நிறுவனத்தின் நிா்வாக இயக்குனா் திரு.பா.பாா்த்தீபன், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளா் திரு.வி.சு.விஜயலாதன், அலுவலக உத்தியோகத்தா் திரு.சித்திராங்கன் மற்றும் புதிய வாழ்வு நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தனர்.

இதன் போது மாணவர்களின் கல்வி தொடர்பாகவும், நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் உரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து மாணவர்களிற்கான துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டு நன்றி உரையுடன் இனிதே நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களின் கல்வி மற்றும் தற்போதைய நாட்டுச் சூழலையும் கருத்தில் கொண்டு குறித்த துவிச்சக்கரவண்டியைகளை வழங்குவதற்கு நிதிஅணுசரனை வழங்கிய கனடாவைச் சேர்ந்த *திருமதி.சௌதா துஸ்யந்தன்* மற்றும் மலேசியாவைச் சேர்ந்த *திருமதி.த.ஆ.உதயராணி* அவர்களிற்கும் இந்நிகழ்வினை நடாத்துவதற்கான நிகழ்விடத்தை தந்துதவிய விழுதுகள் நிறுவனத்தினருக்கும், மற்றும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும், எமது நிறுவனம் சார்ந்தும் மாணவர்கள் சார்ந்தும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.🙏🙏

Comments are closed.