Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

புதிய வாழ்வு நிறுவனத்தின் சிறுவர் சேமிப்புத்திட்டத்திற்கு 20 குழந்தைகள் தெரிவு!!

புதிய வாழ்வு நிறுவனத்தின் சிறுவர் சேமிப்புத்திட்டமானது, இன, மத, மொழி கடந்த ஒரு செயல்திட்டமாகும் , இலங்கை முழுவதிலும் இருந்து வலுவிளப்பிற்கு உள்ளான பெற்றோரைக்கொண்ட அல்லது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதோடு, இந்த சேமிப்பானது எதிர்கால உயர்கல்விக்கு கைகொடுக்கவேண்டும் என்ற நோக்கிலேயே உருவாக்கப்பட்டது.

அதனடிப்படையில் 27/04/22 ஆன இன்று மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 குழந்தைகளுக்கான வங்கிப்புத்தகம்,கல்வி உபகரணங்கள், உண்டியல் மற்றும் பயன்தரு/ பணம் தரு மரக்கன்றுகளும் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார்மாவட்ட விவசாயப்பணிப்பாளர் திருமதி. சகீலா பானு வின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திரு. சமன் பந்துல சேன, மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்டான்லி டீ மெல், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு வரதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து சிறப்பித்ததுடன் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர், மற்றும் இயக்குனர், பணியாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்,

அத்துடன் போரால் முள்ளந்தண்டு பாதிக்க பட்ட ஒருவரின் மனைவிக்கு கூட்டெரு தயாரிப்பதற்காக உதவித்தொகையும் எமது நிறுவனத்தினால் திருமதி சகீலா பானு வின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது.

வருகை தந்த, சிறப்பித்த, சிறப்புற ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்குளுக்கும் இதய பூர்வ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் 🙏

Comments are closed.