திறமைச்சித்திகளைப்பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு
புதிய வாழ்வு நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ,பொம்மைவெளி விடியல் சிறுவர் கழகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டில் திறமைச்சித்திகளைப்பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வானது 24/07/2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணியளவில் ஆரம்பமாகி இனிதே நிறைவுற்றது.
இந்த நிகழ்வில் எமது நிறுவனத்தின் சார்பில் திட்டஇணைப்பாளர் திரு.வி.சு.விஜயலாதன் மற்றும் கணக்காய்வாளர் திரு.இ.சித்திராங்கன் கலந்துகொண்டனர்.
அந் நிகழ்விலே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை,சாதாரண தர பரீட்சை,உயர் தர பரீட்சை போன்றவற்றிலும் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்தும், சான்றிதழ்கள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டனர்.





Previous Post
Next Post
