Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு குடும்பம் ஒரு இலட்சம் நிதியைப்பெற்ற முயற்சியாளர்கள்!!

மதிப்பிற்கும் பாசத்திற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், ஒரு குடும்பம் ஒரு இலட்சம் என்ற சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் நிதியைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே..
1)திருமதி. சக்திவேல் அன்னக்கொடி (சிலாவத்தை முல்லைத்தீவு.)
2) திருமதி. பிரபாகரன் நந்தினி (வட்டுவாகல் முல்லைத்தீவு.)
3)திருமதி. சிங்கராசா பவளராணி ( உடுப்புக்குளம் அளம்பில்)
4) திருமதி. கந்தையா செல்வநாயகி ( உடுப்புக்குளம் அளம்பில்)
5) திருமதி.ஞானேஸ்வரன் நிர்மலா ( கொக்குத்தொடுவாய் முல்லைத்தீவு)

ஆகிய மாற்றுத்திறளாளிப்பெண்களுக்கு கச்சான் பயிர்ச்செய்கையை முதன்மைப்பயிராகவும் , ஏனைய பயிர்ச்செய்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும்,முற்றுமுழுதாக விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்தொகை வழங்கப்பட்டது.

பயனாளிகள் தெரிவு, மேற்பார்வை என்பவற்றை எமது மாணவப்பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்ட முல்லைத்தீவு மாற்றுத்திறனாளிப்பெண்கள் அமைப்பிற்கும், எமக்கு தொடர்ந்து நிதிப்பங்களிப்பு செய்துவரும் மதிப்பிற்குரிய திரு. சி. பிறேம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

Comments are closed.