ஒரு குடும்பம் ஒரு இலட்சம் நிதியினைப்பெற்றோர் விபரம்!!
மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பம் ஒரு இலட்சம் என்ற அடிப்படையில், நிதியினைப்பெற்ற முயற்சியாளர்கள் முறையே..
1) திருமதி. சு. அனுசியா தோட்டவெளி மன்னாரைச்சேர்ந்தவர், இவரது கணவர் பார்வையற்றவர், சுயதொழிலாக பற்றிக்சாயம் போட்ட துணிகளை விற்பனைசெய்து அதன்மூலம் இலாபம் ஈட்டி தனது குடும்பத்தை முன்னேற்றநிலைக்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்டது.
2) திரு. க. துரைரூபன், இவர் விபத்தில் முள்ளம்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர், இவரது துணைவியாரின் உதவியுடன் தோட்டம் செய்வதற்காக,நிதி வழங்கப்பட்டது.
3) திருமதி. அ. கௌசலா .. இவர் கிளிநொச்சி சாந்தபுரத்தைச்சேர்ந்த பெண்தலைமத்துவகுடும்பத்தவர். இவர் அப்பம் செய்து விற்பனை செய்துகொண்டிருப்பவர், அவரது தொழிலை மேம்படுத்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டது.
4) திரு. ந. நிமால் இவர் போர்க்காலத்தில் இரண்டு கால்களையும் இழந்திருந்திருந்தார், இவர் ஒரு இசைக்கலைஞன் என்பதால், அவருக்கு தேவையான கருவி வாங்குவதற்காக வழங்கப்பட்டது.
5) செல்வி. செ. யோகலக்ஸ்மி இவர்யுத்தத்தில் ஒரு கண்ணையும், ஒரு காலின் வலுவையும் இழந்துருந்தார், தனது வாழ்வாதாரத்திற்காக தங்கையுடன் சேர்ந்து கோழிவளர்க்கவே இந்த நி்தி வழங்கப்பட்டது.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, அவர்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டுவர எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் செயல்திட்டங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, தனது தந்தையாரின் ஞாபகமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒளியேற்றும் மதிப்பிற்கும் , அன்பிற்குமுரிய திரு. சிவசாமி பிறேம் அவர்களுக்கு , எமது நிறுவனம் சார்ந்தும், முயற்சியாளர்கள் சார்ந்தும் இதய பூர்வ நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏







Previous Post
Next Post
