ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்கள்!!
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் ஒரு குடும்பம், ஒரு இலட்சம் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ் பயன் பெற்ற முயற்சியாளர்கள் முறையே..
1) திருமதி. சா. செல்வராணி
இவர் கிளிநொச்சியை பிறப்பிடமாக்க்கொண்டவர், கணவனின் உடல்நலகுறைவால், வாழ்வாதாரநிலை பாதிக்கப்பட்ட நிலையில் எமது மாணவப்பிரதிநிதிகளை நாடி இருந்தார், இவர்களுக்கு சிறிய வியாபாரமுயற்சிக்காக இத்தொகை வழங்கப்பட்டது.
2)திரு. ஜெயராஜ் இவர் மன்னாரைப்பிறப்பிடமாக்க்கொண்டவர், சக்கரநாற்காலியில் வாழ்க்கை என்று சோர்ந்துபோகாது, எமது நிறுவனத்தின் கொள்கைகளுக்கு அமைவாக தன்னை சுறுசுறுப்பாக்கி, துவிச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் வாகனங்கள் திருத்துவதற்கான கடை ஒன்றை அமைப்பதற்காக இந்த நிதியைப்பெற்றுக்கொண்டார்.
3) திருமதி. ஜீ. சந்திரவதனி
இவர் வ்வுனியா பூவரசங்குளத்தைச்சேர்ந்த பெண்தலைமைக்குடும்பம், இவர் தனது வாழ்வாதாரமாக கோழிவளர்ப்பு , மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் ரூபாவைப்பெற்றுக்கொண்டார்.
4) திரு. பு. புவிராஜன்
எமது மாணவப்பிரதிநிதிகளில் ஒருவரான புவிராஜன், தாயாரின் துணையுடனே கல்வி கற்றுவருகின்றார், தாயாரின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் அவருக்கு ஒரு இலட்சரூபா வழங்கப்பட்டது.
5) பெ. திவ்வியன் கொட்டகல
இசைத்துறையில் வளர்ந்துவரும் எமது மாணவப்பிரதிநிதியான திவ்வியனிற்கு, அவரது துறையில் மென்மேலும் வளர , அவரை ஊக்குவிக்குமுகமாக ஒரு இலட்ச ரூபா வழங்கப்பட்டது.
சுயதொழில், விவசாயம், குடிசைக்கைத்தொழில்களை ஊக்குவித்து, தமக்கான தேவைகளை தாமே பூர்த்திசெய்து, பொருளாதார வலுப்பெற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு எமது மாணவப்பிரதிநிதிகள் மிகவும் துடிப்புடன் செயல்படும் இத்தருணத்தில் , எமது நிறுவனத்திற்கு தொடர்ந்து கைகொடுக்கும் மதிப்பிற்குரிய திரு. சிவசாமி பிறேம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்முக்கொள்கின்றோம்





Previous Post
Next Post
