Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் பகுதிநேர தொழிலுக்கு உதவி!!

எமது நிறுவனத்தின் செயற்பாடுகளை, மிகத்திறமையாக திட்டமிட்டு செயல்படுத்திக்கொண்டிருக்கும் எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் கைவண்ணங்களையே இங்கே காண்கின்றோம், இவ்வாறான உருவச்சிலைகளை செதுக்குவதுடன், ஓவியங்களை வரைந்து விற்பனைசெய்து வரும் வருவாயில் ஒருபகுதியை தமது கல்விக்காக பாவிக்கின்றனர்,

இவர்களின் திறமையைப்பார்த்து வியந்த எமது மதிப்பிற்குரிய திரு. சிவசாமி பிறேம் அவர்கள், இந்த மாணவர்களை ஊக்குவித்து இதனையே அவர்களின் ஒரு பகுதிநேர தொழிலாக்கி அவர்களின் திறமையை உலகெங்கும் வாழும் எம்மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்,

அதன் அடிப்படையில் ஐந்து மாணவப்பிரதிநிதிகள் தலா ஒரு இலட்சம் ரூபாவைப்பெற்றுக்கொண்டனர், இந்த நிதியானது முற்றுமுழுதாக அவர்களின் தொழில்முயற்சிக்கே பயன்படுத்தப்படவேண்டும் என்பது உறுதியாக கூறப்பட்டுள்ளது.

நிதி உதவியைப்பெற்ற மாணவர்கள் முறையே
1) திரு. த. விதுசன் ( கிழக்கு மாகாணப்பல்கலைக்கழகம், ஓவியர்)
2) திரு. ரா. அழகுராஜா ( யாழ்ப்பாண பல்கலைக்கழகம். இவருக்கான நிதியானது மலையகத்தில் முன்பள்ளி ஆரம்பிப்பதற்கானது.)
3) திரு. சி. அமலைதரன் ( கிழக்கு மாகாணப்பல்கலைக்கழகம், ஓவியர்)
4) செல்வி. இ. டயாளினி ( யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், ஓவியர்)
5) திரு. சி. நிருசாந்த் ( யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம். தெருவோரக்கடை அமைம்பதற்காக வழங்கப்பட்டது)

இவர்கள் எங்களின் கலைஞர்கள், இவர்களை ஊக்குவித்து அடுத்த நிலைக்கு உயர்த்தவேண்டிய கடமைப்பாடு எம்ஒவ்வொருவருக்கும் உண்டு, எனவே இந்தப்பதிவை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவரும் தயவு செய்து இந்தப்பதிவை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்வதன்மூலம் இவர்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொடுக்குமாறு உரிமையோடு கேட்டு நிற்கின்றோம்🙏

இத்திட்டத்திற்கான நிதிப்பபங்களிப்புச்செய்த அன்புக்கும் , மதிப்புக்கும், மரியாதைக்குமுரிய திரு. சிவசாமி பிறேம் அவர்களிற்கு மாணவப்பிரதிநிதிகள் சார்பாகவும், எமது நிறுவனம் சார்பாகவும் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏

Comments are closed.