Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒட்டிசுட்டானைச்சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு நன்னீர் மீன் வளர்ப்பிற்கு உதவி!!

ஒட்டிசுட்டானைச்சேர்ந்த திரு.மகாதேவன் என்பவர் ஒரு மாற்றுத்திறனாளி, அவர் தனது சொந்தக்காணியில் ஒருபகுதியை விற்று வந்த வருவாயில், மழைநீரைத்தேக்கி உபநோகிக்கும் நோக்கில் , இரண்டுகுளங்களை அமைத்து மீன் வளர்க்க எண்ணி இருந்தபோதும், நிதிப்பிரச்சனையால் திட்டத்தை கைவிட்டு, வேறுவேலைகளை செய்துகொண்டிருந்தார்.

இவரது இந்த தூரதோக்கு சிந்தனையை மிகவும் வரவேற்ற எமது மாணவப்பிரதிநிதிகள், திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சரூபாவை வழங்கி, குளத்தை சுத்தீகரித்து மீன் வளர்க்க உதவி புரிந்திருந்தனர்.

இத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்புச்செய்த மதிப்பிற்குரிய திரு. சி. பிறேம் அவர்களிற்கு இதயபூர்வநன்றிகளை பயனாளிகள் சார்பிலும், எமது நிறுவனம் சார்ந்தும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இத்திட்டத்திற்கு ஏனையவழிகளில் உதவிய விமல்பாதர், மாணவப்பிரதிநிதிகளான திரு.வி. விஜயலாதன், திரு.பா. விஜய், செல்வி. கலைச்செல்வி ஆகியோருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்🙏👏👏

Comments are closed.