Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள்!!

மதிப்பிற்குரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் ஒரு குடும்பம் ஒரு இலட்சம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்கள் முறையே..

1) திரு.சு. இருதயராஜா இவர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர், கிளிநொச்சியில் தனது வீட்டிற்கு முன்னால், ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு புத்தக்க்கடை ஒன்றை அமைப்பதற்காக உதவி கோரி இருந்தார், அதற்கமைய ஒரு இலட்ச ரூபா வழங்கப்பட்டது.

2)திருமதி . பார்த்தீபன் மாலினி இவர் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் என்பதுடன் இரண்டுகுழந்தைகளின் தாயுமாவார் இவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கோழிவளர்பிற்காக ஒரு இலட்சரூபா வழங்கப்பட்டது.

3) வட்டக்கச்சியை பிறப்பிடமாகக்கொண்ட சி. கமலநாதன் இவர் போர்க்காலத்தில் ஒருகையை இழந்ததோடு, முள்ளம்தண்டுவடம் பாதிக்கப்பட்ட தனது மகளையும் பராமரித்துவருகின்றார், தன்னால் பாரியவேலைகள் ஏதும் செய்யமுடியாது என்பதனால், ஆடுவளர்ப்பிற்கு உதவி புரியுமாறு கேட்டிருந்தார், அதற்கமைய ஒரு இலட்சரூபா வழங்கிவைக்கப்பட்டது.

4) கு. மிதிலா இவர் இடது காலை இளந்துள்ளார், பாரிய வேலைகள் எதுவும் செய்யமுடியாமையால், தயாரின் உதவியோடு ஆடு வளர்க்க உதவி கோரி இருந்தார் , அதற்கமைய , உதவித்திட்டமாக ஒரு இலட்சரூபா வழங்கிவைக்கப்பட்டது.

5) மன்னாரைப்பிறப்பிடமாக்க்கொண்ட திருமதி. ச. புஸ்பராணியின் கணவர், வலதுகால் பாதிப்பிற்கு உள்ளானதால், கணவரோடு சேர்ந்து சிறுதோட்டம் செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, ஒரு இலட்சரூபா பெறுமதியில் , குளாய்கிணறு வெட்டப்பட்டு, மோட்டார் பொருத்தி கொடுக்கப்பட்டது.

தேவையுடையோரை இனம் கண்டு, அவர்களின் நிலமைகளை நேரில் சென்று அலசி ஆராய்து, சிறப்புற நடந்து கொண்டமைக்காக எமது பல்கலைக்கழக மாணவத்தலைவன் திரு. வி. விஜயலாதன் அவர்களுக்கும், மன்னார் மாவட்ட பிரதிநிதி திரு. சுதர்சன் அவர்களுக்கும் நன்றிகளைக்கூறுவதோடு, பலரது வாழ்வில் ஒளிஏற்ற உறுதுணையாக இருந்து, எமது நிறுவனத்திற்கு தொடர்ந்தும், நிதிப்பங்களிப்பு செய்துவரும் திரு. சிவசாமி பிறேம் அவர்களுக்கு இதய பூர்வ நன்றிகளை முயற்சியாளர்கள் சார்ந்தும், எமது நிறுவனம் சார்ந்தும் தெருவித்துக்கொள்கிற்றோம்.

Comments are closed.