இரண்டு பெண்தலைமைத்துவ குடும்பப்பெண்களுக்கு தறிகள் வழங்கிவைப்பு
திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் நிதிப்பங்களிப்பில், வெண்மதி அமைப்பிற்கு ஊடாக தெரிவு செய்யப்பட்ட இரண்டு பெண்தலைமைத்துவ குடும்பப்பெண்களுக்கு , பன்புல்லு பாய்தறி நிலையம் ஒன்றை நடாத்துவதற்காக 28/11/ 21ல் இரண்டு தறிகள் வழங்கப்பட்டது.
இந்திகழ்விற்கு வருகைதந்த மதிப்பிற்குரிய ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச்சபை தவிசாளர் திரு. சி.சர்வானந்தன் அவர்களுக்கும், ஏறாவூர்பற்று பிரதேச்சபை செயலாளர் திரு. வ. பற்குணம் அவர்களுக்கும், இந்த நிகழ்வை சிறப்புற நடாத்திய திருமதி. செ. அமுதினி அவர்களுக்கும், மற்றும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த புல்லுமலை, செங்கலடி அன்பான மக்களுக்கும் எமது நிறுவனம் சார்ந்து நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதிப்பங்களிப்புச்செய்து, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திப்பொருளாதாரத்தை மேம்படச்செய்யும் அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. சி.பிறேம் அவர்களிற்கு எமது நிறுவனம் சார்ந்தும், முயற்சியாளர்கள் சார்ந்தும், வெண்மதி அமைப்பினர் சார்ந்தும் நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்🙏





Previous Post
Next Post
