Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியில் “தொலைவினில்..”

வடக்கு, கிழக்கு, மலையக மாணவர்களின் ஒரு கூட்டுமுயற்சியே இந்த “தொலைவினில்..” என்ற பாடல் தொகுப்பு. பலமேடைகளில் தன்திறமையை நிரூபித்த மலையக மாணவன் திவ்வியனின் நீண்டநாள் கனவு இன்று நனவாவது குறித்து மகிழ்வடைகின்றோம்.

திவ்வியனே இசையமைத்து, பாடி, நடித்தும் உள்ளமை பெருமிதம் கொள்ள வைக்கின்றது. எமது இந்த மாணவப்பிரதிநிதியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த கலைஞனை உலகெங்கும் இருக்கும் எம் தமிழர்களிடம் கொண்டுசென்று, அனைவரது பாராட்டையும் பெற்று, மென்மேலும் இந்தக்கலைத்துறையில் முன்னேறுவதற்கு, கைகொடுக்குமுகமாக உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்🙏

எமதுதேசத்த்து இளைஞர்கள், கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு என்ற ரீதியில்,

27/08/21 இல் வெளியாகும் ஒலி ஒளி முழு நாடாவை அனைவரிடமும் பகிர்ந்து , இந்த கலைஞனை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தவும் எமது இந்தப்பக்கத்தை 👍& share பண்ணுமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுநிற்கின்றோம்🙏
புதிய வாழ்வு நிறுவனம்..
Lyrics- alagendran
Song Composing and singing- Dhivyan
Song arrangement and mixing- angushan and Nidharshan
Cast- Dhivyan, theeba
Video and editing Mugundhan..

Comments are closed.