Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

சிறுவர் சேமிப்புத்திட்ட அறிமுகமும் வாசிகசாலைக்கு தளபாடஙகள் வழங்களும்!!

மீள் குடியேற்றப்பட்ட தையிட்டி கிராமத்தின் கலைமகள் வாசிகசாலையில், எமது நிறுவனத்தின் சிறுவர் சேமிப்புத்திட்டமானது, அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கலைமகள் வாசிகசாலைக்குத்தேவையான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு சிறப்புவிருந்தினராக மதிப்பிற்குரிய பதில் நீதவானும், சட்டத்தரணியுமாகிய திரு. அன்ரன் புனிதநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

எமது மாணவப்பிரதிநிதிகளோடு இணைந்து நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்து வழிநடாத்திய கலைமகள் வாசிகசாலையின் தலைவர் திரு. ம. நாகேந்திரசீலன் ஆசிரியர் அவர்களிற்கு இதயபூரவ நன்றிகளைத்தெரிவித்முக்கொள்கின்றோம்🙏,

மற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த மதிப்பிற்குரிய திரு. தேவராஜா ஆசிரியர், ரவி அண்ணா, மற்றும் தையிட்டி வாழ் அனைத்து அன்புறவுகளுக்கும் எமது நன்றிகளும், பாராட்டுக்களும்🙏

எமது இந்த சேமிப்புத்திட்டமானது, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள அல்லது, வலுவிழப்பிற்கு உள்ளாள பெற்றோரை உடைய , 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிற்கு 2000/- ரூபாவை நிரந்தரவைப்பில் இடுவதோடு 1000/- ரூபா பெறுமதியான பயன்தருமரங்களை வழங்கிவைப்போம், இந்த மரங்களில் இருந்து பயன்கிடைக்கும்போது, அவற்றை, பெற்றோரோ அல்லது குழந்தைகளின் காவலர்களோ, குழந்தைகளின் கணக்கில் வைப்பிலிடவேண்டும். குழந்தைகள் வளர்ந்து 18 வயதை அடையும்போதே இந்த நிதியைப்பெற்றுக்கொள்ளலாம், இந்த திட்டமானது குழந்தைகளி்ன் எதிர்கால உயர்கல்வியை கருத்தில்கொண்டே எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.

தளபாடங்களுக்கானதும், குழந்தைகளின் கணக்கில் வைப்பிலிடுவதற்குமான நிதியை எமது நிறுவனத்தின் கனடா நாட்டு இயக்குனர் திருமதி. சௌதா துஸயந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்கள், சிறார்களுக்கான கற்றல் உபகரணங்களை மதிப்பிற்குரிய அன்ரன் புனிதநாயகம் ஐயா அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார், இந்த நிகழ்விற்கான செலவீனங்களை செல்வி. இலக்கிய சாந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார்கள், எமது திட்டங்களிற்கு எமக்கு கைதரும் அனைத்து அன்புறவுகளிற்கும், அன்புடன் கூடிய நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றறோம்🙏

Comments are closed.