திரு. இ. விஜயகுமாரின் அனுபவப்பதிவு
முல்லோயா கிராமத்தில் வசித்துவரும் திரு. இ. இராமசாமி அவர்கள், தனது மகனின் உயர்கல்வியைத்தொடர்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதால், கல்விக்கான உதவியை எமது நிறுவனத்திடம் கோரி இருந்தார், தனிப்பட்டவர்களுக்கான கல்வி உதவியை நாம் நிறுத்தி இருப்பதால், தந்தையின் விவசாயத்திற்கு, திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர்அவர்களின் ஒரு இலட்ச திட்டத்தின் கீழ் , உதவி வழங்கியிருந்தோம்.
இன்று அந்த நிதியைப்பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைசெய்வதாகவும் , தனது கல்விக்கானதேவையை தனது தந்தையிடம் இருந்தே பெற்றுக்கொள்வதால், பெருமிதம் அடையும் எமது மாணவப்பிரதிநிதி திரு. இ. விஜயகுமாரின் அனுபவப்பதிவானது, இந்தப்பதிவைப்பார்க்கும் அனைவருக்கும் ஒரு நல்ல சிந்தனைக்குரிய செய்தியைச்சொல்லியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

Previous Post
Next Post
