நாம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு முன்னேறியுள்ள மாற்றுத்திறனாளி!!
ஆளுமை நிறைந்த பெண்களைக்கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதன்மூலம் அந்த கிராமத்தையே முன்னேற்ற முடியும் என்கின்ற எமது நிறுவனத்தின் அடிப்படைக்கொள்கைகளில் ஒன்றான சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளியான செல்வி ச. சகிலா என்ற முயற்சியாளரிற்கு குளிர்க்கழி ( Ice cream) மற்றும், பழச்சாறுகளை தயாரித்து விற்பனை செய்வதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக எமது நிறுவனத்தால் எடுக்கப்பட்ட முயற்சியானது, நாம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு முன்னேறி தனது நண்பர்களுடன் இணைந்து சிறுதோட்டங்கள் செய்வதோடு, பாகற்காய் வடகம், வாழைப்பூ வடகம் குறிஞ்சா வடகம் மற்றும் சத்துமாக்கள் போன்றவற்றைச்செய்வதற்கான பயிற்சிகளை வழங்கி அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேறிவருகின்றார். தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு பாராட்டுக்கள் சகிலா 👏👏👏👏
இவரை ஊக்குவிப்பதற்காக நிதிஉதவி வழங்கிய கனடாவில் பதிவுசெய்யப்பட்ட ஏழு அறக்கட்டளை நிறுவனத்திற்கும், ஏற்பாடு செய்துதந்த தம்பி ரவிக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
உள்ளூர் உற்பத்திகளைப்பெற்றுக்கொள்ள்ள விரும்புவோர் அழையுங்கள்.,
ஆதரவு கொடுங்கள் நன்றி 👍🙏
சகிலா : +94 77 390 5981






Previous Post
Next Post
