Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாவிட்டபுரம் பெண் தலைமைத்துவக் குடும்பத்துக்கு தையல் இயந்திரம் வழங்கல்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சுயதொழில் பயிற்சிகளைப் பெற்றும் நிதி நெருக்கடியால் தமது தொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாத பெண்கள் ஆகியோரில், உடனடியாக உதவி தேவைப்படுவோரைத் தெரிவு செய்து கைகொடுத்து வருகின்றோம்.

தேவையான பயிற்சிகளையும் உபகரணங்களையும் வழங்கி, அவர்களை ஊக்குவித்துத் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், பெண்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளோம்.

அந்த வகையில், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்தை வழிநடத்தும் திருமதி. ஜெ. சிந்து அவர்களுக்கு, அவரது கோரிக்கைக்கு அமைவாகத் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, அவர்களின் தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட NLF Fashion இற்கும் தையல் இயந்திரமும், அதன் செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான துணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பைப் புதிய வாழ்வு நிறுவனத்தின் அமெரிக்கக் கிளை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு உதவிய அமெரிக்கக் கிளைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, தொடர்ந்து இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க ஆதரவளிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம்.

பெண்களின் வளர்ச்சியே எமது தேசத்தின் வளர்ச்சி. ஒன்றாக இணைந்து எமது பெண்களின் கரங்களை வலுப்படுத்துவோம்!
புதிய வாழ்வு நிறுவனம்.

Screenshot

Screenshot

Screenshot

Comments are closed.