Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தர்சினியின் கைவண்ணத்திற்குக் கடல் கடந்து கிடைத்த அங்கீகாரம்

தனது திறமையாலும் கடின உழைப்பாலும் கைத்தறித் துறையில் தனக்கென ஓர் அடையாளத்தையும் மதிப்பையும் உருவாக்கியவர் திருமதி. பவான் தர்சினி அவர்கள்.

அச்சுதன் நெசவுசாலையின் நிறுவனரும், புதிய வாழ்வு நிறுவனத்தின் உபதலைவருமான இவர், எம்முடன் இணைந்து பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகின்றார்.

இவரது நேர்த்தியான கைவண்ணத்தைக் கண்டு, தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் அமைப்பு, தர்ஷினி அவர்களை அணுகி, தங்களுக்குத் தேவையான கைத்தறிச் சேலைகளைத் தயாரித்துத் தருமாறு கேட்டுக்கொண்டது.
அத்துடன், முதன்முறையாகக் கைத்தறி நெசவையும் பற்றிக் கலையையும் இணைத்து, தாங்கள் விரும்பும் தமிழ்ச் சொற்களைச் சேலைத் தலைப்பில் வடிவமைத்துத் தருமாறும் கேட்டுக்கொண்டது.

அந்தப் புதிய முயற்சியில் தயாரிக்கப்பட்ட சேலைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது எமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது.

மேலும், அச்சுதன் நெசவுசாலையின் வளர்ச்சிக்குத் தாம் தொடர்ந்து துணைநிற்பதுடன், எதிர்காலத்திலும் சேலைகளுக்கான சந்தை வாய்ப்புகளை வழங்குவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது எமது பெண்களின் தொழில் வளர்ச்சிக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு நம்பிக்கையான வாய்ப்பாகும்.

திறமைக்கு வாய்ப்பும், உழைப்பிற்கு அங்கீகாரமும் கிடைக்கும்போது பெண்களின் வாழ்க்கையில் அழகான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த வெற்றி சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருமதி. பவான் தர்சினி அவர்களுக்கும், அவரது அச்சுதன் நெசவுசாலைக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

Screenshot

Screenshot

Screenshot

Comments are closed.