Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

தோல் மற்றும் துணிப்பை உற்பத்திக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கல்!

“ உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதாற்றா உழவின்மை உலகைக் கெடும் “
வள்ளுவர் வாக்கிற்கு அமைவாக உழைப்பவர்களே இந்த உலகிற்கு அடிப்படையானவர்கள், என்ற வகையில், எம்மோடு பயணிக்கும் முயற்சியாளரான , புதுக்குடியிருப்பைச்சேர்ந்த திருமதி த. சிறிகலா அவர்கள் தான் கற்றுக்கொண்ட தையல்கலையை மூலதனமாகக்கொண்டு தனதுநண்பிகளுடன் இணைந்து பாடசாலைப்பைகள், உத்தியோகத்தர்கள், மற்றும் போக்குவரத்திற்கான பைகள் என விதம்விதமாக பைகளை வடிவமைத்து, புதுக்குடியிருப்பில் பெரும் நன்மதிப்பைப்பெற்றுவரும் கலாவிற்கும் நண்பிகளுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றோம்.பல்கலைக்கழக மாணவர்களும் ஒரு சிலர் இவர்களிடத்தில் தொழிலைக்கற்றுக்கொள்வதுடன், தமது கல்விக்கான சிறிய உதவித்தொகைகளையும் பெற்றுக்கொள்கின்றனர் என்பது பாராட்டிற்குரியது. பெண்கள், மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உங்களுக்குத்தேவையான தோல், மற்றும் துணிப்பைகளை இவர்களிடத்தில் பெற்றுக்கொள்வதன் மூலம் இவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல முடிந்தவர்கள் உதவுங்கள், அந்த வகையில் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி, பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும், புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளைக்கு மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றோம்🙏, எமது பதிவுகளை உங்கள் நண்பர்கள், உறவினர்களிடத்தில் எடுத்துச்செல்வதன்மூலம் ஒரு பெண்ணுக்கோ, ஒரு உயர்கல்வி கற்கும் மாணவிக்கோ உங்களாலும் உதவமுடியும் .
“ இன்றைய உழைப்பு நாளைய வளர்ச்சி .

Screenshot

Screenshot

Screenshot

Screenshot

Screenshot

Comments are closed.