நோர்வேக்கிளையின் முதலாவது வருடநிறைவை முன்னிட்டு காந்தி முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி!!
புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையின் முதலாவது வருடநிறைவை முன்னிட்டு் நிர்வாகத்தினரால் இன்று புங்குடுதீவு காந்தி முன்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப்பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு. விஜயலாதன், புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சியின் உபசெயலாளர் திரு.கரணாகரன் மற்றும் முன்பள்ளி ஆசிரியர் செல்வி.ஜிபோன், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்த ஆசிரியருக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற வருடம் புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளை ஆரம்பிக்கப்பட்ட போது இந்த முன்பள்ளி மாணவர்களுக்கான தளபாடங்களும் சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.














Previous Post
Next Post
