ஒற்றுமையே எமது பலம்!!
எமது புலத்திலே ஒரு சிறந்த கல்விச்சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் 10.04.2024ல் புதிய வாழ்வு நிறுவனத்தின் நோர்வேக்கிளையானது ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஒரு வருடத்தில் தமது கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதாரத்தடையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மாலைநேரக்கல்வி, குடிநீர் வசதி, தளபாடங்கள், துவிச்சக்கர வண்டி போன்றவற்றை வழங்கியதுடன் 6 பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவர் தம் கல்வியைத் தொடர்வதற்கு மாதாந்த நிதிக்கொடுப்பனவைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது.
இவ்வருடம் மேலும் 4 பல்கலைக்கழக மாணவர்களையும், ஒரு உயர்தர மாணவனையும் உள்வாங்கி அவர்களுக்கும் இம் மாதத்திலிருந்து நிதியுதவியை வழங்கி வருகிறது. இவர்களில் 4 பல்கலைக்கழக மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை மட்டுமன்றி பாடசாலைப் பரிசளிப்பு விழாக்களில் பரிசில்கள் வழங்குவதற்கான நிதியுதவி, மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இசை நிகழ்ச்சிப் பரிசளிப்பு, யாழ்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாற்றாற்றலர் தின நிகழ்வுகளுக்கு நிதி அனுசரனையும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் அனைத்து செயற்பாடுகளுக்கும் எம்மோடு உடன் நின்று தோள் கொடுக்கும் அன்புக்குரிய புலம் பெயர் உறவுகளுக்கு இத்தருணத்தில் மனம் மகிழ்ந்து கரம் பற்றி எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர்கள் மட்டுமன்றி புலத்திலே எமக்கு உறுதுணையாக நின்று எமது வேண்டுகோள்களை செவ்வனே நிறைவேற்றி வைக்கும் புதியவாழ்வு நிறுவனம் கிளிநொச்சி தலைமையகத்துக்கும் புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒற்றுமையே எமது பலம்💪🏽💪🏽💪🏽💪🏽
👫👭👬👭👫👭👬👫👭👬






















Previous Post
Next Post
