கறுப்பிக்குள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலவச மாலை நேரக்கல்வி ஆரம்பம்!!
வட்டக்கச்சியை அண்மித்துள்ள கறுப்பிக்குள கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க , இலவச மாலைநேரக்கல்வியினை 01/02/2020 அன்று ஆரம்பித்து வைத்துள்ளோம்.
இந்த கறுப்பிகுள மக்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள்ஆவர் .
இங்குள்ள மாணவர்கள் 2 அல்லது 3 கிலோமீற்றர் சென்றே , தமது அறிவை வளர்க்கக்கூடிய மிக இக்கட்டான நிலையில் இருக்கின்றளர் ,எனவே இவ்வாறான 75 மாணவர்களுக்கு கல்வி உதவியை செய்வதற்கு நாம் முன்வந்துள்ளோம்,
கல்விக்கூடத்தையும் போதிய ஆசிரியர்களையும் ஏற்பாடு செய்துதந்த அருட்தந்தை டயானியல் அவர்கட்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்🙏,
ஓரிருமாதங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்கடுத்தி கொடுப்போம் என உறுதி கூறுகிறோம்,
எதிர்கால சந்ததிக்கு நல்லதொரு கல்வி அத்திவாரத்தை போடவேண்டியது எமது கடமை , அந்த வகையில் மிகவும் பின்தங்கி உள்ள கிராமங்களை தெரிவு செய்து இவ்வாறான இலவச கல்வி சேவையை வளங்க நாம் தீர்மானித்துள்ளோம்,
எம்முடன் சேர்ந்து பயணிக்க விரும்பும் ஆதரவாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்🙏




Next Post
