Info@
newlifefoundationuk.com
(21) 2286268
28 Beaumont Court NW9 5FR

மாலைநேர இலவசக்கல்விக்கு மழலைகள் ஆர்வம்!!

மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் கறுப்பிக்குள மாணவர்களின் நன்மைகருதி , எமது நிறுவனத்தால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள மாலைநேர இலவசக்கல்விக்கு மிகவும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் வந்து ஆரவாரம் செய்யும் மழலைகள் 😍

எமது நிறுவனத்தின் இந்த சேவையானது பாதிக்கப்பட்ட பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களுக்கு சென்றடைய வேண்டுமென , ஆசிரியர்களும் பெற்றோர்களும் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொண்டனர்.

கல்வியோடு சேர்த்து, கலை, விழையாட்டு என்பவற்றிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை மிகுந்த ஆனந்தத்துடன் அறியத்தருகின்றோம்,

எமது இந்த சேவை வரவேற்கத்தக்கது என நீங்கள் நினைத்தால் , எமக்காக ஒரு உதவி படியுங்கள் உங்கள் நண்பர்கள் , உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

உதவி செய்ய விரும்புவோர் எம்மோடு கைகோர்த்துக்கொள்ளட்டும், உங்களது வாழ்த்துக்களும் ஆசிகளும் எம்மை முன்னோக்கிச்செல்ல வழிவகுக்கும் என்பது திண்ணம் .

அன்புடன் ரொபேட்🙏
தொடர்புகளுக்கு
+94 77 972 2343( ரொபேட்)

Comments are closed.